ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணையும் யுவன்?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணையும் யுவன்?

விஜய் - யுவன்

விஜய் - யுவன்

'தளபதி 67' படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவாக இருக்கலாம் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

  நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65-வது படமான இதை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  இதற்கடுத்ததாக விஜய் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். தளபதி 66 என்றழைக்கப்படும் இது விஜய்யின் நேரடி தெலுங்குப் படமாக உருவாகிறது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

  இந்நிலையில் தற்போது விஜய்யும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சந்தித்திருக்கிறார்கள். இதையடுத்து 'தளபதி 67' படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவாக இருக்கலாம் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். இதைத் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் யுவனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

  2003-ஆம் ஆண்டு கே.பி.ஜெகன் இயக்கிய விஜய்யின் 'புதிய கீதை' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், அதன் பிறகு அவர்கள் வேறெந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Yuvan Shankar raja