மதம் குறித்த சர்ச்சை கேள்விக்கு யுவன்சங்கர்ராஜா பதிலடி

மதம் குறித்த சர்ச்சை கேள்விக்கு யுவன்சங்கர்ராஜா பதிலடி

யுவன் சங்கர்ராஜா

மதம் சார்ந்த சர்ச்சை கேள்வி எழுப்பியவர்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

  • Share this:
முன்னணி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குரான் வசனம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இந்து அடிப்படைவாதி ஒருவர், யுவன்சங்கர் ராஜா இந்த பதிவின் வாயிலாக இஸ்லாத்தை பரப்புகிறார் என பதிவிட்டார்.

யுவன்சங்கர் ராஜாவின் ட்விட்டர் பதிவில் கிருஷ்ணன் என்பவர் பதிவிட்ட பின்னூட்டத்தில், ‘நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன்சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்" என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா `வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த கருத்துகளுக்கு யுவன் சங்கர் ராஜா, "நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவது ஆகும். திரைப்பிரபலங்களும் தனிமனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன. என் நம்பிக்கை என்உரிமை’ எனப் பதிலளித்திருந்தார்.

மற்றொரு நபர் புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்" என்று பின்னூட்டம் இட்டுள்ளார்.

இதற்கு யுவன்சங்கர் ராஜா, “நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.

மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: