Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடிய யுவன் - சந்தோஷ் நாராயணன்!

பொன்னியின் செல்வன் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடிய யுவன் - சந்தோஷ் நாராயணன்!

சந்தோஷ் நாராயணன் - யுவன் - ரஹ்மான் - டிரம்ஸ் சிவமணி

சந்தோஷ் நாராயணன் - யுவன் - ரஹ்மான் - டிரம்ஸ் சிவமணி

ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களிலும் 'உயிரே' படத்தின் ’சந்தோஷ கண்ணீரே’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்ட யுவன், அந்த பாடலின் சில வரிகளையும் பாடினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் இருவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த வரலாற்று புனை கதையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை நேற்று வெளியிட்டனர் படக்குழுவினர்.

    இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயண் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றியும், இசையில் அவரது திறமையைப் பற்றியும் பேசினர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷன் என்றும், அது தொடரும் என்றும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களிலும் 'உயிரே' படத்தின் ’சந்தோஷ கண்ணீரே’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், அந்த பாடலின் சில வரிகளையும் பாடினார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பேசிய சந்தோஷ் நாராயணன், ”ஏ.ஆர்.ரஹ்மானின் எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். ஆனால் மிகவும் பிடித்தது ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ’ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தான்” என்றார்.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    பின்னர் இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயண் இருவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் 'அரபிக் கடலோரம்' பாடலை இணைந்து பாடினர். அதோடு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து இருவரும் டிரம்ஸ் வாசித்து அரங்கத்தை உற்சாகப்படுத்தினர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman, Music director santhosh narayanan, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி