Home /News /entertainment /

ராஜா எழுத யுவன் பாட அட்டகாசமாக உருவான நினைவெல்லாம் நீயடா பாடல்

ராஜா எழுத யுவன் பாட அட்டகாசமாக உருவான நினைவெல்லாம் நீயடா பாடல்

இளையராஜா - யுவன்

இளையராஜா - யுவன்

ராஜாவின் வரியை அவரது மகன் யுவன் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்த அவர் உடனடியாக ராஜாவிடம் அதனைக் கூற, அவரும் சம்மதித்திருக்கிறார்

இளையராஜா மீண்டும் முன் வரிசைக்கு வந்திருக்கிறார். அவர் எப்போது பின்வரிசைக்கு சென்றார் என்று கேட்கலாம். நாம் சொல்வது படங்களின் எண்ணிக்கையை வைத்து.

தற்போது அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறவர்களில் இளையராஜாவும் ஒருவர். புதியவர்களும் பழைய காலம் போல் மனக்கிலேசம் இன்றி  அவரை தேடிச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. இளையராஜாவும் அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கிறார்.

சென்ற வருடம் ஜூலையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் நினைவெல்லாம் நீயடா. சிலந்தி, அருவாசண்டை படங்களை இயக்கிய ஆதிராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரஜன், மனிஷா யாதவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முக்கியமான வேடத்தில் காளி வெங்கட் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. படத்தின் கதையை அவரிடம் கூறியபோது சில திருத்தங்களை இளையராஜா கூறியிருக்கிறார். அதற்கேற்றபடி ஸ்கிரிப்டில் மாற்றங்களை ஆதிராஜன் செய்துள்ளார். தனது பங்குக்கு அவர், ஒரு பாடலை நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கேட்க, இளையராஜா மறுப்பேதும் கூறாமல் ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.

பெரும்பாலும் இளையராஜா இசையில் உருவாகும் அனைத்துப் பாடல்களின் பல்லவியையும் இளையராஜாவே எழுதுவார். கண்ணதாசன் போன்ற ஒருசிலர் விதிவிலக்கு. இதன் காரணமாகவே அவருக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் உரசல் எழுந்ததாக கூறப்படுவது உண்டு.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இளையராஜா வரிகளில் பாடல் கிடைத்ததும் ஆதிராஜனுக்கு இன்னொரு ஐடியா தோன்றியிருக்கிறது. ராஜாவின் வரியை அவரது மகன் யுவன் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்த அவர் உடனடியாக ராஜாவிடம் அதனைக் கூற, அவரும் சம்மதித்திருக்கிறார். அப்படி ராஜாவின்  இசையிலும், வரியிலும் உருவான பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்தப் படத்தின் ஹைலைட்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றார் ஆதிராஜன்.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

நினைவெல்லாம் நீயடா படத்தை லேகா தியேட்டர்ஸ் தயாரித்து வருகிறது. விரைவில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Ilayaraja, Yuvan Shankar raja

அடுத்த செய்தி