இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தீவிர எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு வலிமை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நாங்க வேற மாறி என்ற பாடலும் வெளியானது. அந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், பத்திரிகையாளர் கவிதா எழுதிய எண்ணம்போல் வாழ்கை என்ற பாடல், யுவன் சங்கர்ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் யூ டியூப் பக்கத்தில் வெளியாகிறது. அதுதொடர்பாக சென்னையில் யுவன் சங்கர் ராஜா ஊடகங்களை சந்தித்தார். அப்போது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் அன்மையில் வெளியான வலிமை படத்தின்
"நாங்க வேற மாதிரி" பாடலை மூன்று நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
அடுத்தடுத்து மாநாடு, வலிமை ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக கூறிய அவர் அதற்கான பணிகளை தான் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்
தன்னுடைய U1ரெக்கார்ட்ஸ் தளத்தில் புதிய இசையமைப்பாளர்கள் பாடகர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் கவிதை வளம் நிறைந்த தமிழ் பாடல்களுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வலிமை படத்தின் "நாங்க வேற மாதிரி" பாடலைத் தொடர்ந்து அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.