• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yuvan Shankar Raja: ஹாய் சொன்ன யுவன் - புகைப்பழக்கத்தை விட்ட ரசிகர்!

Yuvan Shankar Raja: ஹாய் சொன்ன யுவன் - புகைப்பழக்கத்தை விட்ட ரசிகர்!

யுவன் சங்க்ர்ராஜா

யுவன் சங்க்ர்ராஜா

ஒரு ரசிகர், தல, நீங்க ஒரு ஹாய் சொன்னா, புகைப்பிடிக்கிறதை விட்டுடறேன் என்று பதிவிட்டிருந்தார்.

  • Share this:
    நேற்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இதையொட்டி முன்னெடுக்கப்பட்டன. தனி நபர்கள், பிரபலங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பர தரப்பினர் புகையிலையின் கெடுதல் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நடிகர் கார்த்தி, இதுவரை திரைப்படங்களில் புகைப்பிடித்ததில்லை, இனியும் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்றார். அவரைப்போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியை தவிர்ப்பவர் சிவகார்த்திகேயன்.

    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் புகையிலை விழிப்புணர்வு பதிவு ஒன்றை போட்டிருந்தார். நீங்கள் புகைப்பிடிப்பதால் உங்கள் உடம்பில் விஷத்தை மெதுவாக ஏற்றிக் கொள்வதோடு உங்களை சூழ்ந்திருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படத்துகிறீர்கள். குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர் வினையாற்றியிருந்தனர். ஒரு ரசிகர், தல, நீங்க ஒரு ஹாய் சொன்னா, புகைப்பிடிக்கிறதை விட்டுடறேன் என்று பதிவிட்டிருந்தார். உடனே யுவன் ஹாய் என்று பதிலளித்தார். ரசிகரும் புகைப்பழக்கத்தை விடுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலர் யுவனிடம் ஹாய் சொல்லும்படி கேட்டனர்.

    யுவன், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் மாமனிதன் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. யுவன் இசையில் தயாராகியிருக்கும் மாநாடு படத்தின் பாடல்கள் இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டும். படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மறைவையொட்டி, முதல் சிங்கிள் வெளியீட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தள்ளி வைத்தார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கையில் மாநாடு பாடலை வெளியிடுவது மனிதாபிமானமற்ற செயல் என்று இதுவரை மாநாடு பாடல்களை சுரேஷ் காமாட்சி வெளியிடவில்லை. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் விரைவில் மாநாடு பாடல்கள் வெளியாகும் என யுவன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: