ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொடுவா படத்தின் டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

கொடுவா படத்தின் டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

கொடுவா

கொடுவா

நிதின் சத்யா - சம்யுக்தா சண்முகம் நடித்துள்ள கொடுவா படத்தின் டைட்டிலை அறிமுகம் செய்த பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நிதின் சத்தியா நடித்துள்ள கொடுவா படத்தின் டைட்டில் டீசரை யுவன் சங்கர் ராஜாவும், முதல் பார்வையை ஜி.வி. பிரகாஷூம் வெளியிட்டுள்ளனர். 

இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பரும்,  நடிகருமான நிதின் சத்யா, பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்மூலம் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

இவர் தற்போது 'கொடுவா' என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை சுரேஷ் சாத்தையா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.  அதேபோல் கொடுவா படத்தின் முதல் பார்வையை மற்றொரு இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷூம்,  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் இறால் பண்ணையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறால் பண்ணையில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவே கொடுவா திரைப்படம் உருவாகி இருக்கிறது.  அதில் அந்த இளைஞனின் பிரச்சனை, பழிவாங்கல் என அழுத்தமான ஜனரஞ்சக படமாக எடுக்க படக்குழுவினர் முயற்சி செய்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா உட்பட  ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Also read... இணையத்தை கலக்கும் நடிகை மௌனி ராயின் பிகினி போட்டோஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment