ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

இதற்கு முன்பு அமலா பால், பார்த்திபன், விக்ரம், த்ரிஷா போன்ற பல தென்னிந்திய நடிகர்களுக்கு இந்த கெளரவம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகம் கோலிவுட் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையில் வழங்கப்படுவது தான் இந்தக் கோல்டன் விசா. முதலீட்டாளர்களின் வர்த்தக நிறுவனம் தோல்வியைச் சந்தித்தால் அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தால் விசாவின் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

    இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தைவிட்டு வேறு நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் வசித்தாலும் அவர்களின் விசா ரத்து செய்யப்படாது. இந்த விசா தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கிடைத்துள்ளது.

    வெண்பஞ்சு மேகம்... வெள்ளை உடையில் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியின் வாவ் படங்கள்!

    1997-ம் ஆண்டு இசை உலகில் அறிமுகமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ரசிகர்களிடத்தில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதற்கு முன்பு அமலா பால், பார்த்திபன், விக்ரம், த்ரிஷா போன்ற பல தென்னிந்திய நடிகர்களுக்கு இந்த கெளரவம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Yuvan Shankar raja