வெளிநாட்டில் யுவன் ஷங்கர் ராஜா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
1997-ம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். தமிழின் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஃபேவரிட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன்.
Suriya 41: சூர்யாவுக்கு ஜோடியான 18 வயது இளம் நடிகை!
தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு. இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேடைகளில் பதிவு செய்துள்ளனர். இதுவே தமிழ் சினிமா இயக்குனர்கள் யுவன் சங்கர் ராஜா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.
விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!
தற்போது அவர் மாமனிதன், குருதி ஆட்டம், நானே வருவேன், எரியும் கண்ணாடி, ஏஜெண்ட் கண்ணாயிரம், விருமன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் யுவன், பாடல் ஒன்றிற்கு துபாய் சாலையோரத்திlல் ஜாலியாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.