Home /News /entertainment /

12-வது முறையாக விஷாலுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா!

12-வது முறையாக விஷாலுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா!

விஷால் - யுவன்

விஷால் - யுவன்

இதற்கு முன் விஷாலின் 11 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவர்கள் இணையும் 12வது படமாக லத்தி இருக்கும்.

விஷாலின் லத்தி படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைப்பார் என விஷால் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வீரமே வாகை சூடும் படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் லத்தி. விஷாலின் நண்பர்களும், நடிகர்களுமான ரமணா, நந்தா இணைந்து ராணா புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். பாலசுப்பிரமணியெம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைக்கிறார். வினோத்குமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தை எழுதி, இயக்கி வருகிறார். சுனைனா படத்தின் நாயகி.

Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

லத்தியின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் விஷால் யுவன் சங்கர் ராஜா லத்திக்கு இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் விஷாலின் 11 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவர்கள் இணையும் 12வது படமாக லத்தி இருக்கும்.

பீஸ்ட் ட்ரைலரில் இடம்பெறும் இந்த வில்லன் யார் தெரியுமா?

லத்தியை தொடர்ந்து விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளார். படத்திற்கு அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் லத்தியை முடிக்கும் வேகத்துடன் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் லத்தி வெளியாக உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor vishal, Yuvan Shankar raja

அடுத்த செய்தி