Home /News /entertainment /

யுவன் – ஹிப்ஹாப் ஆதி குரலில் காஃபி வித் காதல் பட பாடல் வெளியீடு…

யுவன் – ஹிப்ஹாப் ஆதி குரலில் காஃபி வித் காதல் பட பாடல் வெளியீடு…

யுவன் சங்கர் ராஜா - ஹிப் ஹாப் ஆதி

யுவன் சங்கர் ராஜா - ஹிப் ஹாப் ஆதி

. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, மாளவிகா சர்மா, சம்யுக்தா ஷன்முகம், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யுவன் சங்கர் ராஜா, ஹிப் ஹாப் ஆதியின் குரலில் காஃபி வித் காதல் படத்திலிருந்து தியாகி பாய்ஸ் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    முதன்முறையாக 2 இசையமைப்பாளர்களும் இணைந்து பாடியுள்ளதால் இருவரின் ரசிகர்களும் தியாகி பாய்ஸ் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

    கலகலப்பான கமர்ஷியல் படங்களை எடுப்பதில் மாஸ்டராக இருப்பவர் சுந்தர் சி.  27 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஜேனரில் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

    கோவிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி

    சமீபத்தில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை, கலகலப்பு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    அடுத்ததாக ரொமான்டிக் காமெடி ஜேனரில் காஃபி வித் காதல் என்ற படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார்.

    வேலையில்லாத சினேகன் என் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார் - நடிகை ஜெயலட்சுமி

    இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா, மாளவிகா சர்மா, சம்யுக்தா ஷன்முகம், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து காஃபி வித் காதல் படத்தை தயாரித்து வருகின்றனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி நல்ல ரீச்சை பெற்றுள்ளது. அடுத்தாக ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து யுவன் பாடியுள்ள தியாகி பாய்ஸ் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Yuvan Shankar raja

    அடுத்த செய்தி