ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டி.இமானுக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்...!

டி.இமானுக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்...!

டி.இமான், யுவன் சங்கர் ராஜா

டி.இமான், யுவன் சங்கர் ராஜா

டி.இமான் கோரிக்கையை ஏற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.  இமான் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் மெலோடி பாடல். 

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆர்யா நடிக்கும் கேப்டன் திரைப்படத்திற்காக டி.இமான் இசையில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். 

  நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் தற்போது கேப்டன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர் ஆர்யாவுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

  இந்த நிலையில் டி.இமான் இசையில், மதன் கார்க்கி எழுதியுள்ள ஒரு பாடலை கேப்டன் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா பாடியுள்ளார். அந்தப் பாடல் மெலோடி வகையில் உருவாக்கி இருப்பதாகவும்,  விரைவில் அது வெளியாகும் எனவும் டி.இமான் தெரிவித்திருக்கிறார்.

  தமிழ் திரையுலகில் தற்போது ஒரு இசையமைப்பாளருக்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடி கொடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டி.இமான் இசை அமைக்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா பாடிக் கொடுத்துள்ளார்.

  Also read... சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய அன்புச்செழியன்...!

  சக்தி சவுந்தரராஜான் - ஆர்யா கூட்டணியில் உருவாகும் கேப்டன் திரைப்படம் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.  அந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இது காட்டுப் பகுதியில் நடைபெறும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது என கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: D.imman, Yuvan Shankar raja