Home /News /entertainment /

விருமன் படத்தின் இசை வேலைகள் நிறைவடைந்துவிட்டது - யுவன் சங்கர் ராஜா

விருமன் படத்தின் இசை வேலைகள் நிறைவடைந்துவிட்டது - யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

விருமன் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. மேலும் கூடுதல் (இளையராஜ) பாடல் விரைவில் வெளியாகிறது யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விருமன் படத்தின் பின்னணி இசை வேலைகள் நிறைவடைந்துவிட்டதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். அத்துடன் படத்தின் கூடுதல் பாடல் (இளையராஜா) வெளியாகவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் கொம்பன் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். மேலும் விருமன் படத்திற்கு இளையராஜா பாடியுள்ள டைட்டில் பாடல் வெளியாகவுள்ளது எனவும் கூறியிருக்கிறார்.

கார்த்தி - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பருத்தீ வீரன் படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் அந்தப் பாடல் இரு குழந்தைகளுக்கானதாக அமைந்தது.



ஆனால் இந்த முறை விருமன் படத்தின் டைட்டில் படலையே இளையராஜா பாடியுள்ளார். அந்தப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் பாடல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்புகின்றனர்.

Also read... பிகினியில் நடிகை பிரியங்கா சோப்ரா - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

சூர்யா தயாரிப்பில் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ள விருமன் பாடத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Yuvan Shankar raja

அடுத்த செய்தி