Yuvan - Simbu: சிம்புவுடனான படத்தைப் பகிர்ந்து ’ட்விஸ்ட்’ வைத்த யுவன்!

யுவன் - சிம்பு

சில தினங்களுக்கு முன்னர் ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது.

  • Share this:
    சிம்புவுடனான படத்தைப் பகிர்ந்த இசையமைப்பாளர் யுவன், ஒரு நல்ல செய்தி வந்துக் கொண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.



    அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சில தினங்களுக்கு முன்னர் ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது. மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் பாடலை யுவனும் அவரது சகோதரி பவதாரணியும் பாடியிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது சிம்புவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்த யுவன், ஒரு நல்ல செய்தி வந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அது என்னவாக இருக்கும் என்ற பரபரப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: