Valimai Update : வலிமை அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா - உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித் - யுவன் சங்கர் ராஜா

சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயில் அலியிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினடமும் அப்டேட் கேட்டு அளற விட்டனர்.

  • Share this:
    வலிமை திரைப்பட அப்டேட் வேண்டி நாடு நாடாக கொடி பிடித்த அஜித் ரசிகர்களுக்கு தற்போது யுவன் சங்கர் ராஜா வாயிலாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

    அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட திரைப்படம் வெளியான நிலையில், இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்-வினோத் மீண்டும் இணைந்து வலிமை திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏறத்தாழ நான்கு மாத தாமதத்திற்கு பின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கினாலும் பல்வேறு காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து பாதித்த வண்ணம் இருந்து வந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டுமென வீதிவீதியாக கொடி பிடிக்கத் தொடங்கினர் அஜித் ரசிகர்கள். கோயில்களுக்கு முன்னால் பேனர் அடிப்பது, பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சரிடம் அப்டேட் கேட்டது, ட்விட்டரில் தினமும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை டேக் செய்து டார்ச்சர் செய்வது, அரசியல் பிரபலங்களிடம் அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்தது.

    இதற்கு ஒருபடி மேலே சென்று சர்வதேச அளவில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்க முடிவு செய்த அஜித் ரசிகர்கள் இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயில் அலியிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினடமும் அப்டேட் கேட்டு அளற விட்டனர்.

    இதையடுத்து, இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அஜித்குமார் வலிமை திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு தான் ஆனால் தயாரிப்பாளருக்கும் தனக்கும் இதுதான் வாழ்க்கை என்றும் இதனால் சரியான நேரத்தில் அப்டேட்டை தர உள்ளதாகவும் தெரிவித்தார். மே மாதம் அஜித்குமார் பிறந்த நாளன்று படத்திலிருந்து சுவாரசிய தகவல்கள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக மீண்டும் அப்டேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக இந்தியா இங்கிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மைதானம் வரை சென்ற அஜித் ரசிகர்கள் இங்கிலாந்து மண்ணில் வலிமை அப்டேட் வேண்டி பதாகை தூக்கிப் பிடித்த வண்ணம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் அடுத்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டி நடிகரின் அப்டேட் வெளியானதால் இன்னும் உக்கிரமடைந்த அஜித் ரசிகர்கள் அப்டேட் தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் மாநாடு படத்தின் புரமோஷனுக்காக கிளப் அவுஸ் வந்து அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

    வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் யுவன்சங்கர்ராஜா தெரிவிக்க உற்சாகத்தில் துள்ளி குதிக்க துவங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

    Must Read : Beast second look: தெறிக்கவிடும் ‘பீஸ்ட்’ செகண்ட் லுக்!

    கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அஜித்குமார் நடித்து வெளியான வரலாறு திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தாயை காக்கும் மகனா’ என்ற பாடல் அஜித்தின் ஆகச்சிறந்த அம்மா சென்டிமென்ட் பாடலாக இருக்கும் நிலையில் அதனை மிஞ்சும் ஒரு பாடலாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட் கிடைத்துவிட்டதால், அடுத்தடுத்து அப்டேட் கொடுத்தும் வெறுப்பேற்றும் விஜய் ரசிகர்களை சிறிது காலம் சமாளிக்க ஒரு சாக்கு கிடைத்தது என்று தற்பொழுது பெருமூச்சுவிட தொடங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
    Published by:Suresh V
    First published: