பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில், இளையராஜா விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா, நான் கருப்பு திராவிடன் என்று குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
குறியீடாக யுவன் சங்கர் ராஜா எதனை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
'மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க - Exclusive : ''மோடி - அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்பப்பெற மாட்டேன்'' - இளையராஜா திட்டவட்டம்
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது இந்த விவகாரம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரைக்கும் சென்று, அவர் மோடியை ஆதரித்ததற்காக இளையராஜாவை அவமதிப்பதாக என்று கண்டித்திருந்தார்.
இதையும் படிங்க - மோடிக்கு ஓட்டு போடவும் சொல்லவில்லை, ஓட்டு போட வேண்டாம் என்றும் சொல்லவில்லை - இளையராஜா
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் கருப்பு ஆடைகளை அணிந்து, 'நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன்' என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அதிக விருப்பங்களையும் பகிர்வுகளையும் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பாஜக களமாடி வருகிறது. அதன் முக்கிய தலைவரான மோடியை தந்தை இளையராஜா ஆதரித்துள்ள நிலையில், மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட கொள்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.