இளைஞர்களின் போதை மருந்து... யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்!

யுவன் சங்கர்ராஜா

இசையமைப்பாளர்களுக்கு இடையே நட்பு பாராட்டுவதில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறார் யுவன்.

  • Share this:
    தீம் இசை என்றாலும், ஹிட் பாடல் என்றாலும் உடனடியாக ரசிகர்கள் நினைவுக்கு வரும் யுவன்ஷங்கர் ராஜா, இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    பில்லா திரைப்படத்தில் நடிகர் அஜீத் நடந்து வரும்போது ஒலிக்கும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை யாராலும் இன்றளவும் மறக்க முடியாது. ஒரு நாயகன் நடந்து வரும் காட்சிக்கு, இத்தனை கம்பீரம் சேர்க்க முடியும் என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்துக் காட்டியவர் யுவன்சங்கர்ராஜா.

    இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தந்தையின் சாயல் துளி கூட இல்லாமல் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா 150 படங்களை கடந்து, 24 ஆண்டுகளாக தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு.

    இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேடைகளில் பதிவு செய்துள்ளனர். இதுவே தமிழ் சினிமா இயக்குனர்கள் யுவன் சங்கர் ராஜா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனிமுத்திரை பதித்துள்ள யுவன்சங்கர்ராஜா, பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். பிற இசையமைப்பாளர்ளை தனது இசையில் பாட வைத்தும், இசையமைப்பாளர்களுக்கு இடையே நட்பு பாராட்டுவதில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறார்.

    Yuvan Shankar Raja Birthday, Yuvan Shankar Raja, u1 records, Yuvan Shankar Raja first movie, Yuvan Shankar Raja first song recording, யுவன் ஷங்கர் ராஜா, யுவன் சங்கர் ராஜா முதல் பாடல், யுவன் சங்கர் ராஜா முதல் படம், yuvan wife, yuvan shankar raja wife, yuvan songs, yuvan music, yuvan melodies, yuvan shankar raja melody songs, yuvan discography, யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள், யுவன் பாடல்கள், யுவன் படங்கள், யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்
    மனைவியுடன் யுவன்


    யுவன் சங்கர் ராஜா தனது பொலிவை இழந்துவிட்டார் என்ற விமர்சனம் வரும்போதெல்லாம் ஒரு மாபெரும் வெற்றி அவரது இருப்பை உணர்த்தும். அதற்கு சான்றுதான் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல். இன்றளவில் யூடியூபில் 120 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

    24 ஆண்டுகள் கடந்து விட்டாலும் தன்னுடைய ஒப்பற்ற இசையால் இன்னும் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும் யுவன்... இசை உலகின் இளவரசன் என்றால் அது மிகையாகாது...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: