முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Maanaadu: மாநாடு முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை அறிவித்த யுவன்!

Maanaadu: மாநாடு முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை அறிவித்த யுவன்!

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

படத்தின் முதல் பாடல் ரமலான் பெருநாளில் வெளியாகியிருக்க வேண்டியது, ஆனால் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் வெளியாகாமல் தள்ளிப் போனது.

  • Last Updated :

மாநாடு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு முதல்முறையாக நடித்திருக்கும் படம் இது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் - சிம்பு கூட்டணியில் உருவான மன்மதன் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி என்பதால் மாநாடு பாடலை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் முதல் பாடல் ரமலான் பெருநாளில் வெளியாகியிருக்க வேண்டியது, ஆனால் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் வெளியாகாமல் தள்ளிப் போனது. இந்நிலையில், யுவனின் யு1 நிறுவனம் மாநாடு படத்தின் இசை உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து, முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பதை யுவனே அறிவிப்பார் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். அதன்படி நேற்று மாலை, வரும் ஜுலை 21-ம் தேதி மதியம் 12.06 மணிக்கு முதல் சிங்கிள் வெளியாகும் என, யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

அரசியல் படமான இதில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதியாக இருக்கிறார். ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டு, திரையரங்குகள் செயல்படும் தேதி அறிவித்த பின் படவெளியீட்டு தேதியை முடிவு செய்யவிருக்கிறார்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Simbu, Yuvan Shankar raja