• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘வென்று வா வீரர்களே’ ஒலிம்பிக் வீரர்களுக்கு தமிழக அரசின் பாடல் - பாடி இசையமைத்த யுவன்!

‘வென்று வா வீரர்களே’ ஒலிம்பிக் வீரர்களுக்கு தமிழக அரசின் பாடல் - பாடி இசையமைத்த யுவன்!

யுவன் - மு.க.ஸ்டாலின்

யுவன் - மு.க.ஸ்டாலின்

தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘வென்று வா வீரர்களே’ பாடலுக்கு யுவன் பாடி இசையமைத்துள்ளார்.

  • Share this:
    ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டுள்ள தமிழக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசின் 'வென்று வா வீரர்களே' எனும் பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார். யுவன் ஒரு போதை மருந்து என்று சொல்லுமளவுக்கு அவரது பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.





    இந்நிலையில் தற்போது, யுவன் தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒரு சிறப்பு பாடலை இயற்றியுள்ளார். முன்னதாக, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்திய அரசின் சார்பாக "இந்துஸ்தானி வே" என்ற பாடலை வெளியிட்டார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தமிழக ஒலிம்பிக் வீரர்களை வீடியோ மூலம் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘வென்று வா வீரர்களே’ பாடலுக்கு யுவன் பாடி இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஒலிம்பிக் வீரர்கள், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: