சிங்கிள் ஷாட் (அல்லது ஒன் ஷாட்) திரைப்படம் என்பது ஒரே ஷாட்டில் மொத்தப் படத்தையும் எடுப்பது. படத்தின் ரன்னிங் டைமும், படப்பிடிப்பு நேரம் ஒன்றாகவே இருக்கும். ஒரு இடத்தில் ஒரு காட்சியை எடுத்துவிட்டு, இன்னொரு இடத்தில் அடுத்தக் காட்சியை எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியே வேறொரு இடம் போக வேண்டும் என்றால், கேமராவும் கதாபாத்திரங்களுடன் பயணிக்கும்.
1976 லேயே சிங்கிள் ஷாட் திரைப்படத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 1982 இல் வெளியான, 57 நிமிடங்கள் ஓடக்கூடிய மெக்பத் திரைப்படமே வெற்றிகரமான முதல் முயற்சி எனலாம். 2002 இல் அலெக்ஸாண்டர் சுக்ரேவ் இயக்கத்தில் வெளியான ரஷ்யன் ஆர்க் திரைப்படம் முக்கியமானது. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதற்காக நடிகர்கள் ஆறுமாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். கதையாகவும் இந்தப் படம் பாராட்டப்பட்டது. பல விருதுகளை வென்றது.
2015 இல் வெளியான ஜெர்மன் திரைப்படமான விக்டோரியா சிங்கிள் ஷாட் திரைப்படங்களில் முக்கியமானது. இரண்டு மணி பதினெட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் இரவில் ஆரம்பித்து, அதிகாலை சூரியன் உதிக்கையில் நிறைவுபெறும். பல்வேறு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பயணிக்கும் கதையிது. படத்தின் ஓட்டத்தில் புதுப்புது கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் வந்து கொண்டேயிருக்கும். அத்தனையும் சிறப்பாக எந்த தடங்கலும், உறுத்தலும் இன்றி படமாக்கப்பட்டிருக்கும்.
Also read... பூஜை தினங்களை முன்னிட்டு திரையரங்கில் வெளியான அரண்மனை படம்!
இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் மூவி என்று யுத்த காண்டம் படத்தை அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்பட 100 தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் இந்தப் படம் தயாராகியுள்ளது. குமரன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். பாரடைஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது. பார்த்திபனும் இதேபோன்று சிங்கிள் ஷாட் திரைப்படம் ஒன்றை எடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment