Home /News /entertainment /

யூ-ட்யூப், விளம்பரம் இப்போது நயன்தாரா படம் - ஆச்சர்யப்படுத்தும் ரித்து ராக்ஸ் ரித்விக்!

யூ-ட்யூப், விளம்பரம் இப்போது நயன்தாரா படம் - ஆச்சர்யப்படுத்தும் ரித்து ராக்ஸ் ரித்விக்!

ரித்விக்

ரித்விக்

தற்போது நயன்தாரா நடிக்கும் ஓ2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறான் சிறுவன் ரித்விக்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒரேயொரு செய்தியாளர் வீடியோவால் ஓவர் நைட்டில் ஃபேமஸான ரித்து ராக்ஸ் நித்விக் நடிகை நயன்தாராவின் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    கோயம்புத்தூரை சேர்ந்த ரித்விக் ரிது ராக்ஸ் எனும் தனது யூ-ட்யூப் சேனலில் பல கெட்டப்புகளில் நடித்து அசத்துகிறான். ’ரிப்போர்ட்டர்ஸ் கலாட்டா’ என செய்திவாசிப்பாளரையும், செய்தியாளரையும் மையப்படுத்திய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. அதில் செய்தி வாசிப்பாளர் சரண்யா, செய்தியாளர் தன்ராஜ், வேல்ராஜ் என வெவ்வேறு கெட்டப்புகளில் கலாட்டா செய்திருந்தான் சிறுவன் ரித்விக்.

    இந்த வீடியோவை தொடர்ந்து ரித்து ராக்ஸ் சேனலுக்கு, சப்ஸ்கிரைபர்கள் குவிய தொடங்கினார்கள். அதோடு அந்த சேனலில் பதிவிடப்படும் அனைத்து வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது. தவிர பிரபல துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நாட்டாமை பட கெட்டப்புகளில் தோன்றியிருந்தான் ரித்விக்.



    இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிக்கும் ஓ2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறான் சிறுவன் ரித்விக். இதை வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த ஜிகே விஷ்ணு என்பவர் இயக்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Youtube

    அடுத்த செய்தி