Home /News /entertainment /

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகும் யூடியூப் பிரபலம்...

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகும் யூடியூப் பிரபலம்...

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

'பிளாக் ஷீப்' என்ற யூடியூப் சேனலில் நடித்ததன் மூலம் மோனிஷா பிளெஸ்ஸி பிரபலமானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் பிரபல யூ-ட்யூபர் மோனிஷா பிளெஸ்ஸி நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    நடிகர் சிவகார்த்திகேயன், 'மண்டேலா' புகழ் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தி 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இப்படத்தில் தற்போது யோகி பாபு இணைந்துள்ள நிலையில், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக பிரபல யூடியூபர் மோனிஷா பிளெஸ்ஸி நடிக்கிறாராம். 'பிளாக் ஷீப்' என்ற யூடியூப் சேனலில் நடித்ததன் மூலம் மோனிஷா பிளெஸ்ஸி பிரபலமானார். பின்னர் அவர் 'கலக்க போவது யாரு சீசன் 8'-லும் பங்கேற்றார்.

    Youtuber Monisha Blessy in Sivakarthikeyan's Maaveeran, maaveeran tamil, maaveeran sivakarthikeyan, maaveeran song, maaveeran movie 2011, maaveeran sivakarthikeyan release date, maaveeran sivakarthikeyan director, maaveeran cast, maaveeran ott, sivakarthikeyan wife, sivakarthikeyan age, sivakarthikeyan songs, sivakarthikeyan father, sivakarthikeyan sister, sivakarthikeyan daughter, aaradhana sivakarthikeyan, sivakarthikeyan - twitter, மாவீரன், சிவகார்த்திகேயன், மாவீரன் திரைப்படம்
    மோனிஷா பிளெஸ்ஸி


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விக்ரமின் கோப்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க, மூத்த நடிகை சரிதா சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிக்கிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. தவிர இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி