Covid 19: கொரோனா தொற்றால் பலியான இளம் நடிகர்

டி.எஸ்.மஞ்சுநாத்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்தது சாண்டல்வுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்தது சாண்டல்வுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்யுக்தா 2 மற்றும் கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார் மஞ்சுநாத்.

    உடல்நலக்குறைய்வால் பாதிக்கப்பட்ட மஞ்சுநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 35.

    டாக்டர் டி.எஸ் மஞ்சுநாத்தின் அகால மரணம் அவரது நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் கன்னட திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா படத்தில் மஞ்சுநாத் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதில் சந்தன் ஆச்சார் மற்றும் சஞ்சனா ஆனந்த் முக்கிய வேடங்களில் நடித்தனர். இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    அபிராம் இயக்கும் ’ஜீரோ பெர்சண்ட் லவ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் மஞ்சுநாத். இப்படத்தில் தப்லா நானி, ஓம் பிரகாஷ் ராவ் மற்றும் எஸ் நாராயண் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே படத்தின் ஹீரோ இறந்த செய்தி இப்போது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: