Home /News /entertainment /

விஜய்யின் அப்படிப்போடு பாடலுக்கு நடுரோட்டில் இறங்கி ஆடிய இளம்பெண்!

விஜய்யின் அப்படிப்போடு பாடலுக்கு நடுரோட்டில் இறங்கி ஆடிய இளம்பெண்!

அப்படிப்போடு பாடல்

அப்படிப்போடு பாடல்

கர்நாடகாவின் உடுப்பியில் அப்படிப்போடு பாடலுக்கு நடு ரோட்டில் இறங்கி ஆடிய இளம் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விஜய்யின் அப்படிப்போடு பாடலுக்கு இளம் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘கில்லி’. இந்தப் படத்தில், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

    இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. இப்படம் வெளியாகி 18 வருடங்கள் கடந்தாலும், இன்றும் ஃப்ரெஷ்ஷான ஃபீலை தருகிறது.

    கில்லி படத்தில் விஜய்யின் காமெடி சென்ஸ், ஆக்‌ஷன், நடனம் என அனைத்துமே டாப் டக்கர் ரகத்தில் இருக்கும். குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் அப்படிப்போடு பாடலைக்கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜி.வி.பிரகாஷின் பென்சில் பட இயக்குநர் மணி நாகராஜ் திடீர் மரணம்

    இந்நிலையில் கர்நாடகாவின் உடுப்பியில் அப்படிப்போடு பாடலுக்கு நடு ரோட்டில் இறங்கி ஆடிய இளம் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அப்படிப்போடு பாடல் ஒலிக்கிறது. அதைக்கேட்டு காரில் இருந்து இறங்கிய அந்த இளம் பெண், எதைப் பற்றியும் யோசிக்காமல் உற்சாகமாக நடனமாடுகிறார். அந்த வீடியோ தான் தற்போதையை இணைய ட்ரெண்ட்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி