Rajinikanth: இளம் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட் - ரஜினியை இயக்குகிறாரா?

ரஜினிகாந்த்

அவப்பெயரை போக்கும் விதத்தில் தானே இன்னொருமுறை சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் ரஜினி என்கிறார்கள்.

  • Share this:
    ‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினி அடுத்த யார் படத்தில் நடிக்கிறார், என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் சுவாரஸியமானவை.

    இன்னும் ஓரிரு படங்களில் சினிமாவுக்கு குட்பை சொல்லும் முடிவில் ரஜினி இருக்கிறார். ’அண்ணாத்த’ படத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய முடிந்துவிட்டது. பேட்ச் வொர்க்குக்காக ஆர்.ஏ புரம், பெலிசியா டவர்ஸில் அரங்கு அமைத்திருக்கிறார்கள். சில நாள் படப்பிடிப்பு இங்கு நடக்கும் என தெரிகிறது. அது முடிந்தால் அண்ணாத்தயில் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்தும் முடிந்துவிடும். படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வெளியாகும்.

    அடுத்து ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இந்தத் தகவல் இப்போதும் மாற்றமின்றி அப்படியே உள்ளது. அனேகமாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கக்கூடும் என்கிறார்கள். சௌந்தர்யா இயக்கத்தில் நடித்த கோச்சடையான் தோல்வியுடன் ரஜினிக்கு எதிர்மறை பெயரை சம்பாதித்து தந்தது. அது ஏற்படுத்திய கடனிலிருந்து மீள, லிங்கா படத்தில் நடித்தார். அப்படமும் விநியோகஸ்தர் சிலருக்கு நஷ்டம் ஏற்படுத்தி, பிரச்சனையை உருவாக்கியது. இந்த அவப்பெயரை போக்கும் விதத்தில் தானே இன்னொருமுறை சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் ரஜினி என்கிறார்கள். அது அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லும் கடைசிப் படமாகவும் இருக்கக்கூடும் என்பது தகவல்.

    ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின், தயாரிப்பாளர்களின் விருப்பம். உடம்பை அதிகம் வருத்திக் கொள்ளாத கதைகளாகப் பார்த்து நடித்தால் இன்னும் பத்துப் படங்கள் அவர் தாராளமாக நடிக்கலாம். ரஜினியின் முடிவில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: