Home /News /entertainment /

புற்று நோய் பாதிப்பால் இளம் நடிகர் சென்னையில் மரணம்… திரைத்துறையினர் அதிர்ச்சி

புற்று நோய் பாதிப்பால் இளம் நடிகர் சென்னையில் மரணம்… திரைத்துறையினர் அதிர்ச்சி

நடிகர் கிஷோர் தாஸ்

நடிகர் கிஷோர் தாஸ்

தனது தாய் கண் முன்னரே நடிகர் கிஷோர் தாஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புற்று நோய் பாதிப்பு காரணமாக இளம் நடிகர் ஒருவர் மரணம் அடைந்திருப்பது திரைத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் pகஷோர் தாஸ். 28 வயதாகும் இவர் மாடலாகவும், நடிகராகவும் இருந்து வந்துளளார். இவருக்கு நீண்ட நாட்களாக புற்று நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

    பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில், தாய் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் சென்னையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

    இதையும் படிங்க - மாதவனின் 'ராக்கெட்ரி' படம் எப்படி இருக்கு.?

    இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் நேற்று பிரிந்தது. தனது தாய் கண் முன்னரே நடிகர் கிஷோர் தாஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அசாமின் பலஸ்பரி நகரம்தான் கிஷோருக்கு சொந்த ஊராகும். நீண்ட நாட்களாக புற்று நோய் பாதிப்பில் இருந்து வந்த அவர், முதலில் மும்பையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 24ம் தேதி வெளியான ‘தாதா தும் தஸ்தோ பார்’ என்ற படத்தில் கிஷோர் இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து டெலிவிஷன் சீரியல் மற்றும் படங்களில் அவர் நடித்து வந்த நிலையில் இப்படியொரு சோகம் நடந்திருக்கிறது.

    இதையும் படிங்க - விக்ரம் படத்திற்கு பாராட்டு மழை பொழிந்த மகேஷ் பாபு… இயக்குனர் லோகேஷை சந்திக்க விருப்பம்

    பிரபல பாடகர்களான ஜுபீன் கார்க், தீப்லினாதேகா, நீலக்சி நியோக், ராகேஷ் ரியான் உள்ளிட்டோருடன் இணைந்து இசை ஆல்பங்களை கிஷோர் கொடுத்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Cinema

    அடுத்த செய்தி