உனக்கு வயசே ஆகாதா? - பிரபல நடிகரை பார்த்து கேள்வி கேட்ட ஜெனிலியா

படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது

news18
Updated: May 27, 2019, 9:15 AM IST
உனக்கு வயசே ஆகாதா? - பிரபல நடிகரை பார்த்து கேள்வி கேட்ட ஜெனிலியா
ஜெனிலியா
news18
Updated: May 27, 2019, 9:15 AM IST
நடிகை ஜெனிலியா கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் லுக்-கை பார்த்து உனக்கு வயசே ஆகாதா என்று கமெண்ட் செய்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதுவரை 8 போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்று 9-வது போஸ்டர் வெளியானது . இந்த போஸ்டரை ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பகிர்ந்து, ’ஜெயம் படத்திற்கு முன்னால் ரவியை பார்த்தது போல் இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.

 இயக்குநர் மோகன் ராஜாவின் இந்த பதிவுக்கு நடிகை ஜெனிலியா கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார் 

Also watch

First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...