பா. ரஞ்சித் தயாரிப்பில் நாயகனாக யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார்.
இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங்கை கவனிக்க, கலை இயக்குனராக ஜெயரகு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு, பொறுப்பான தந்தையாகவும் நடித்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை. படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 22-ம் தேதி நடிகர் யோகி பாவுவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. சிறுமி ஸ்ரீமதியுடன் யோகிபாபு கடலருகே நின்றுகொண்டு கைகாட்டும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்தது.
February 3! Watch out for #BommaiNayagi ✨
An experience that will be close to your heart #BommaiNayagiFromFeb3@iYogiBabu @officialneelam @YaazhiFilms_ @shan_shanrise pic.twitter.com/X9arRuRHNy
— pa.ranjith (@beemji) January 4, 2023
படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
Also read... துணிவு நேரத்தில் ட்ரெண்டாகும் விஸ்வாசம்.. யூடியூப்பில் சாதனை படைத்த அஜித் பட பாடல்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Yogibabu, Pa. ranjith