பாவாடையில் யோகி பாபு; கவர்ச்சி நடனத்தில் யாஷிகா - ஜாம்பி ட்ரெய்லர் ரிலீஸ்

ஒரு இடத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் டிரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

news18
Updated: August 21, 2019, 6:58 PM IST
பாவாடையில் யோகி பாபு; கவர்ச்சி நடனத்தில் யாஷிகா - ஜாம்பி ட்ரெய்லர் ரிலீஸ்
ஜாம்பி பட ட்ரெய்லரில் யோகி பாபு
news18
Updated: August 21, 2019, 6:58 PM IST
யோகி பாபு, யாஷிகா ஆனந்த நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை புவன் நல்லன் இயக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கவர்ச்சி நடனமாடி யாஷிகா அசத்தியுள்ளார். ஒரு இடத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் டிரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் ட்ரெய்லருக்கு வலு சேர்த்துள்ளது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு ட்ரெய்லரில் தெரிவித்துள்ளது.


மிருதன் படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியாகும் ஜாம்பி வகை படமாக இந்தப் படம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...