முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தோனி கொடுத்த சூப்பர் கிஃப்ட்.. வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த யோகி பாபு!

தோனி கொடுத்த சூப்பர் கிஃப்ட்.. வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த யோகி பாபு!

யோகி பாபு

யோகி பாபு

கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த யோகி பாபு, படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனக்கு பேட் பரிசளித்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு நடிகர் யோகி பாபு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் நடிகர் யோகி பாபு. பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். அதோடு சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் பொம்மை நாயகி படம் வெலியானது. அதில் பெண் குழந்தையின் தந்தையாக தனது உணர்ச்சிமிகு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தோனி பரிசளித்த பேட்டுடன், அவருக்கு தனது நன்றியை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யோகி பாபு. ”நன்றி தோனி சார், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் யோகி. அதோடு ‘பெஸ்ட் விஷஸ் யோகி பாபு’ எனக் குறிப்பிட்டு, தோனி கையெழுத்திட்டிருக்கும் பேட் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த யோகி பாபு, படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவிக்கும். இதற்கு முன்பு நடிகர் விஜய்யும் யோகி பாபுவுக்கு பேட் ஒன்றை பரிசளித்திருந்தார்.

தவிர, தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் Lets get married என்ற படத்திலும் யோகி பாபு நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Yogi babu