Home /News /entertainment /

படப்பிடிப்பின் போது யோகி பாபுவுக்கு ஆச்சரியமளித்த ஷாருக்கான்...!

படப்பிடிப்பின் போது யோகி பாபுவுக்கு ஆச்சரியமளித்த ஷாருக்கான்...!

ஷாருக்கான், யோகி பாபு

ஷாருக்கான், யோகி பாபு

அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கிவரும் புதிய படத்திலும் யோகி பாபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஷாருக், யோகி பாபு காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது இவரது முதல் இந்திப் படமாகும்.

சமீபத்தில் குறுகிய காலத்தில் மாஸ் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன் என்றால், நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபு. இருவரது வளர்ச்சியுமே அசுரத்தனமானது. மூன்று டஜன் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துக் கொண்டே, ஒரு டஜன் படங்களில் நாயகனாகவும் நடிக்கிறார் யோகி பாபு. விரைவில் லைகா தயாரிக்கும் படம் ஒன்றிலும் இவர் நாயகனாக நடிக்க உள்ளார்

அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கிவரும் புதிய படத்திலும் யோகி பாபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஷாருக், யோகி பாபு காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று வாரங்கள் இந்தப் படத்துக்காக யோகி பாபு கால்ஷீட் தந்துள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் படங்களுக்கே இப்படி மொத்தமாக தேதி தந்ததில்லை என்கிறார்கள்.

அட்லி இயக்கும் இந்தப் படம் சமீபத்தில் புனேயில் தொடங்கியது. நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் நயன்தாராவுடன், ப்ரியாமணியும் கலந்து கொண்டார். அவரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கேள்வி. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது

Also read... விமர்சனங்களை கடந்து லாபத்தை தந்த அரண்மனை 3...!

ஷாருக்கானுடன் நடித்த போது, தனது மண்டேலா படம் குறித்து கூறியுள்ளார் யோகி பாபு. அதற்கு ஷாருக்கான், அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதாகக் கூறி யோகி பாபுக்கு ஆச்சரியமளித்துள்ளார். 2012 முதல் காலாண்டில் உலக அளவில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை பிரபல இணையதளம் வெளியிட்டது. அதில் மண்டேலாவும் இடம்பெற்றிருந்தது. அந்த பட்டியலில் இடம்பெற்ற படங்கள் பரவலாக அனைவராலும் பார்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றதால் உலக அளவில் அதிகம் பேரிடம் மண்டேலா படமும் சென்று சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Shah rukh khan, Yogi babu

அடுத்த செய்தி