தமிழில் முன்னணி காமெடி நடிகராக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என தமிழின் பெரும்பான்மையான பிரபல நடிகர்களின் படங்களில் அவர் தான் காமெடியன். மற்றொரு பக்கம் சோலோ ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மண்டேலா படத்தில் முதன்மை வேடத்தில் நடித்த அவர் ஒரு நடிகராகவும் மிளிர்ந்தார். அதற்கு முன் வந்த பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் இயல்பாக நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதையும் காட்டினார்.
அவர் ரசிர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதால் அவ்வப்போது அவர் காமெடி வேடங்களில் நடித்த சிறு பட்ஜெட் படங்களில் அவர் தான் ஹீரோ என விளம்பரப்படுத்த துவங்கினர். இதனையடுத்து நான் அந்தப் படத்துக்கு ஹீரோ இல்லை, நகைச்சுவை வேடத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன் என யோகி பாபு அடிக்கடி விளக்கம் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட தாதா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் யோகி பாபு மட்டுமே இருக்கிறார்.
இதனைப் பகிர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. நிதின் சத்யா தான் ஹீரோ. மக்களே நம்பாதீங்க என விளக்கம் கொடுத்திருந்தார். தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர், விஜய்யுடன் வாரிசு போன்ற படங்கள் யோகி பாபு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.
நடிகர் யோகி பாபு அடிக்கடி கோவிலுக்கு செல்வது செய்திகளில் வெளியாகிய வண்ணம் இருந்தன. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது விஐபிகளுக்கான வழி காலியாக இருந்தபோதும், அவரை அனுமதிக்காமல் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் காத்திருந்தார். அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவரிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.