Home /News /entertainment /

தயவு செய்து இதுபோல் விளம்பரம் செய்யாதீர்கள். கோபத்தில் நடிகர் யோகி பாபு! என்ன காரணம்?

தயவு செய்து இதுபோல் விளம்பரம் செய்யாதீர்கள். கோபத்தில் நடிகர் யோகி பாபு! என்ன காரணம்?

யோகி பாபு

யோகி பாபு

ரசிகர்கள் யோகி பாபுவின் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.

    ’தாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த யோகி பாபு, தயவுசெய்து இதுபோல் விளம்பரம் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு காட்டில் அடை மழை என்றே சொல்லலாம். சிறிய  பட்ஜெட் படங்கள் தொடங்கி ரஜினி, விஜய் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் வரை எல்லா படத்திலும் யோகி பாபுவின் காமெடியை பார்க்க முடிகிறது. இதுப்போக ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் யோகி பாபு நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மண்டேலா படம் விமர்சனம் ரீதியாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும்  யோகி பாபு தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசத்தை காட்டி வருகிறார்.

    சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

    இந்நிலையில் சமீபத்தில் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. அதாவது சென்னை 28 புகழ் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் ‘தாதா’ . இந்த படத்தில் முக்கியமான ரோலில் யோகி பாபு நடித்து இருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ’தாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது. அதில் யோகி பாபு புகைப்படம் மட்டுமே இடம் பெற்று இருந்தது. அவர் கையில் துப்பாக்கி வைத்து சுடுவது போல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘தாதா’ படத்தின் ஹீரோ யோகிபாபு என்று நினைத்து கொண்டனர். இந்த படத்திலும் யோகி பாபு தான்  ஹீரோவாக நடிக்கிறார் என்று வதந்தியும்  பரவ தொடங்கின.



    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோகி பாபு ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் ’தாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து அதில், “ இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி. ” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யோகி பாபுவின் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.



    அதுமட்டுமில்லை இதற்கு படத்தின் ஹீரோ நடிகர் நிதின் சத்யாவும் நன்றி கூறியுள்ளார். யோகி பாபுவின் போஸ்ட்டை ஷேர் செய்த நிதின் சத்யா அதில், “ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான்” என்று யோகி பாபுவை குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ’தாதா’ படத்தின் அப்டேட்டுகள் குறித்து இருவரிடமும் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Tamil Cinema, Yogi babu

    அடுத்த செய்தி