Home /News /entertainment /

காதல் கதையில் யோகி பாபுவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?

காதல் கதையில் யோகி பாபுவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?

லட்சுமி மேனன் - யோகி பாபு

லட்சுமி மேனன் - யோகி பாபு

முற்றிலும் மாறுபட்ட நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதலை இது சொல்வதாக கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் ஏற்பட்ட காமெடி பஞ்சத்தை ஓரளவு போக்கியவர் என நடிகர் யோகிபாபுவை சொல்லலாம். நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு மற்றும் சந்தானம் இருவரும் ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கிய பிறகு, அந்த இடத்தை கொஞ்சமேனும் நிரப்பியவர் யோகி.

    ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனது கரியர் கிராஃபை உயர்த்திக் கொண்டார். நகைச்சுவை படங்களிலும் கர்ணன் போன்ற சீரியஸ் படங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். மடோன் அஷ்வின் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'மண்டேலா'வில் அவரது நகைச்சுவை அல்லாத நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. 'வலிமை', 'பீஸ்ட்', 'கடைசி விவசாயி', 'அயலான்', 'பொம்மை நாயகி', 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட படங்கள் யோகி பாபு நடிப்பில் வரவிருக்கின்றன.

    இந்நிலையில் தற்போது யோகி பாபு ஒரு புதிய காதல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தான் தற்போதைய ஹாட் நியூஸ். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்குவதாகவும், முற்றிலும் மாறுபட்ட நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதலை இது சொல்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, தமிழில் ‘கும்கி’ படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’, ‘றெக்க’, ‘வேதாளம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் அவர் தனது படிப்பை முடிப்பதற்காக படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்து, அதன் பிறகு 2020-ல் முத்தையா இயக்கிய 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியானார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Lakshmi Menon, Yogi babu

    அடுத்த செய்தி