கெஞ்சிக் கேட்கிறேன்... இனி இப்படி செய்யாதீர்கள் - நடிகர் யோகி பாபு கோரிக்கை

இரண்டு, மூன்று காட்சிகளில் நான் நடித்த படங்களின் போஸ்டர்களில் என்னைத் தனியாக வைத்து போஸ்டர் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

கெஞ்சிக் கேட்கிறேன்... இனி இப்படி செய்யாதீர்கள் - நடிகர் யோகி பாபு கோரிக்கை
யோகி பாபு
  • Share this:
சமீபத்தில் ‘தௌலத்’ படக்குழுவினர் யோகி பாபு இடம்பெற்றிருக்கும் போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்த யோகி பாபு, “எனக்கும் ‘தௌலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் யோகி பாபு. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
“சில வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த சிறிய படங்கள் எல்லாம் இப்போது ரிலீசாகின்றன. ஒரு சில படங்களில் நான் இரண்டு மூன்று காட்சிகளில் நான் நடித்திருப்பேன். இப்போது என்ன செய்கிறார்கள் என்றால் என்னைத் தனியாக வைத்து ஹீரோ என சொல்லி அந்தப் படத்தின் போஸ்டரை வெளியிடுகிறார்கள். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்.


நமக்கென ரசிகர்கள் இருப்பார்கள். இதுபோன்ற செயல்களால் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் என எல்லோரும் ஏமாந்து போகிறார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் என்னுடைய போட்டோவை வைத்து போஸ்டர் வடிவமைத்து சிலர் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். சிலர் உங்கள் போஸ்டரைப் பார்த்துத் தான் படத்தை வாங்கினோம் என்று விநியோகஸ்தர்கள் போனில் பேசியிருக்கிறார்கள்.

சேலம், தர்மபுரியைச் சேர்ந்த சில ரசிகர்கள் கூட என்னிடம் பேசியிருக்கிறார்கள். உங்களது போஸ்டரைப் பார்த்து படத்தில் நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் தியேட்டருக்குச் சென்றோம். ஆனால் நீங்கள் ஒன்றிரண்டு காட்சிகளில் தான் வருகிறீர்கள் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் மனக்கஷ்டமாக இருக்கிறது.

சமீபத்தில் தௌலத் என்ற படத்தில் என்னை வைத்து போஸ்டர் தயார் செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தில் சிவன் தான் ஹீரோ. தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் என்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தால் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.


இரண்டு, மூன்று காட்சிகளில் நடித்திருக்கும் படங்களில் என்னை ஹீரோவாக வைத்து விளம்பரப்படுத்த வேண்டாம். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்யாதீர்கள். அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களை ஏமாற்றுவது போல உள்ளது. என்னுடைய புகைப்படத்தை தனியாகப் போட்டு போஸ்டர் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டாம்.” என்று யோகிபாபு கூறியுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading