Home /News /entertainment /

யோகி பாபு நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

யோகி பாபு நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பூமர் அங்கிள் படத்தில் யோகி பாபு

பூமர் அங்கிள் படத்தில் யோகி பாபு

முன்பு கான்ட்ராக்டர் நேசமணி என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் பெயர் பூமர் அங்கிள் என்று மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக மாறியுள்ளார் யோகி பாபு. இவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால் தங்களது படங்களில் யோகியை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்களும் முன்னணி ஹீரோக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்நிலையில், முன்னணி கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் ரோபோ ஷங்கர் இணைந்து நடித்துள்ளார்.

    ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    அறிமுக இயக்குனர் சுவதீஸ் இந்த படத்தை இயக்குகிறார். முழு நீள காமெடிப் படமாக பூமர் அங்கிள் உருவாக்கப்படவுள்ளது.

    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹல்க் சூப்பர் ஹீரோ போன்று ரோபோ ஷங்கர் தோற்றம் அளிக்கிறார். படத்தில் அவர் மைனர் குஞ்சு என்ற கேரக்டரில் நடிக்கிறார்.



    ஏஜென்ட் நேசம் என்ற கேரக்டர் யோகி பாபுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கமலின் விக்ரம் படத்தின் மூலம் ஏஜென்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலம் அடைந்ததால், ஏஜென்ட் நேசம் என்ற கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    முன்பு கான்ட்ராக்டர் நேசமணி என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் பெயர் பூமர் அங்கிள் என்று மாற்றப்பட்டுள்ளது.

    விருமன் வெற்றிக்கொண்டாட்டம்

    யோகி பாபு, ரோபோ ஷங்கரை தவிர்த்து படத்தில் ஓவியா, எம்.எஸ். பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Robo Shankar, Yogi babu

    அடுத்த செய்தி