ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

படத்திற்கான பூஜையின்போது யோகிபாபு மற்றும் படக்குழுவினர்

படத்திற்கான பூஜையின்போது யோகிபாபு மற்றும் படக்குழுவினர்

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கதை, திரைக்கதை, வசனம் எழுதி யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியிருப்பவர் யோகிபாபு. ஒரு படத்தின் ஹீரோவுடைய கால்ஷீட்டை எளிதாக பெற்று விடலாம். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று திரைத்துறையினர் கூறும் அளவுக்கு படு பிஸியாக இவர் இருக்கிறார்.

ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெறுகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை யோகிபாபுவுக்கு உள்ளது.

3 நாட்களில் இமாலய வசூல்! உலகளவில் சீறும் பொன்னியின் செல்வன்! அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம்!

2009-ல் வெளியான இயக்குனர் அமீர் நடித்த யோகி படத்தின் மூலம் யோகி பாபு அறிமுகம் ஆனார்.        அதன்பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், 2014-ல் வெளியான வீரம், மான் கராத்தே, அரண்மனை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அது முதற்கொண்டு யோகி பாபுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மாலத்தீவு கடற்கரையில் பிகினியில் வலம் வரும் நடிகை பரினீதி சோப்ராவின் போட்டோஸ்!

அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கடந்த 2016-ல் வெளியான வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

First published:

Tags: Yogi babu