• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யோகி பாபுவின் பேய் மாமா - போஸ்டரைப் போல கதையும் காப்பியா?

யோகி பாபுவின் பேய் மாமா - போஸ்டரைப் போல கதையும் காப்பியா?

பேய் மாமா

பேய் மாமா

  • Share this:
    பேய் படங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கவில்லையெனில் பேய்களால் ஒருநாள் சினிமாவே நாசமாகிவிடும். தமிழில் பத்து படங்கள் தயாரானால் எட்டு பேய்ப் படங்களாக இருக்கின்றன. யோகி பாபு நடித்திருக்கும் பேய் மாமா என்ற திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

    பேய் மாமா என்றொரு திரைப்படம் தொடங்கப்பட்டதோ, படப்பிடிப்பு நடத்தப்பட்டதோ யாருக்கும் தெரியாது. நாற்காலி ஒன்றில் யோகி பாபுவின் தலைமட்டும் இருப்பதாக ஒரு போஸ்டரை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அதிலிருந்தே படத்தின் குவாலிட்டியை ஒருவர் அறிந்து கொள்ளலாம். நேற்று வேறொரு போஸ்டரை வெளியிட்டு, செப்டம்பர் 24-ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்தனர். படத்தை ஷக்தி சிதம்பரம் எடுத்துள்ளார்.

    Yogi Babu Pei Mama poster copied from hindi movie, yogi babu, yogi babu pei mama, yogi babu movies, yogi babu comedy, yogi babu comedy video, yogi babu movies, pei mama poster, யோகி பாபு, யோகி பாபு பேய் மாமா, பேய் மாமா போஸ்டர், யோகி பாபு பேய் மாமா படம்
    இந்தி போஸ்டர்


    Yogi Babu Pei Mama poster copied from hindi movie, yogi babu, yogi babu pei mama, yogi babu movies, yogi babu comedy, yogi babu comedy video, yogi babu movies, pei mama poster, யோகி பாபு, யோகி பாபு பேய் மாமா, பேய் மாமா போஸ்டர், யோகி பாபு பேய் மாமா படம்
    பேய் மாமா


    அவர் வெளியிட்டுள்ள பேய் மாமா போஸ்டர் 2020-ல் வெளியான இந்தி பூட் படத்தின் போஸ்டரை அப்படியே காப்பியடித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரையே காப்பியடித்தவர்கள் கதையை மட்டும் சொந்தமாகவா யோசித்திருக்கப் போகிறார்கள்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பேய் மாமாவில் யோகி பாபுடன் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். திரையிட எந்தப் படமும் இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு பேய் மாமாவால் ஏதேனும் நன்மை கிடைத்தால் நல்லது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: