பொழுதுபோக்கு

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali

தீபாவளிக்கு சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர்.சி - யோகி பாபு படம்

சுந்தர்.சி தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் புதிய படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர்.சி - யோகி பாபு படம்
சுந்தர்.சி - யோகி பாபு
  • Share this:
‘ஆக்‌ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இதனிடையே கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாயா பஜார்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை சுந்தர். சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் உள்ளிட்ட 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சுந்தர்.சி.யின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பத்ரி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நாளை அக்டோபர் 26-ம் தேதி ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் சுந்தர்.சி, விடிவி கணேஷ், அஸ்வின், ஷாம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.சுந்தர்.சி அவ்னி மூவிஸ் சார்பாக நான் சிரித்தால், மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் 6-வது படமாக நாங்க ரொம்ப பிஸி படம் அமைந்துள்ளது
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading