தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த யோகி பாபு

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த யோகி பாபு
தமிழக முதல்வருடன் யோகி பாபு
  • Share this:
நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தான் கால்ஷீட் கொடுத்திருந்த படங்களில் நடித்து முடித்த யோகி பாபு, திரைத்துறை பிரபலங்களை அழைத்து சிறப்பாக தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுத்த யோகி பாபு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது அவருடன் பாடகர் வேல்முருகன், இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க: தனிமைப்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் குடும்பத்தினர்!First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading