Home /News /entertainment /

‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை

‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை

நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு

‘மண்டேலா’ திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மண்டேலா’படத்தில் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் தர்மம் என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.

‘மண்டேலா’ திரைப்படம் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய நகைச்சுவை படமாக உருவாகி வருவதாக தெரிகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக ‘அழகிய தமிழ் மகள்’ சீரியல் நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார், ‘மண்டேலா’ திரைப்படத்தில் யோகிபாபுவின் நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும்ம் எனது கேரக்டரும் மக்கள் மனதில் பதியும் விதமாக தனித்துவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.



ஆறாது சினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா ராஜ்குமார், டூ லெட், மனுசங்கடா, அசுரவதம், திரௌபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த டூ லெட் திரைப்படம் பல்வேறு திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைக் குவித்தது. அதேபோல் மலையாளத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஷீலா ராஜ்குமார் நடித்த கும்பளங்கி நைட்ஸ் திரைப்படம் கேரள அரசின் விருது கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: தொழிலதிபரை மணமுடித்தார் காஜல் அகர்வால்

தற்போது 6 படங்களில் நடித்து வருவதாக தெரிவித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், கமர்ஷியல் படங்களில் நடிக்கும் ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிப்பில் எந்த குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும், நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Kollywood, Yogi babu

அடுத்த செய்தி