12 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் யோகிபாபு?

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் யோகிபாபு?
யோகி பாபு
  • Share this:
தளபதி, ரோஜா, தர்பார், செக்க சிவந்த வானம், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவு மட்டுமின்றி குறும்படங்கள், அசோகா, உறுமி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்குநராக பணியாற்றிய படங்களுக்காக 12 முறை தேசிய விருது மற்றும் மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். இதுதவிர இவரது படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளன.

கடைசியாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தர்பார் திரைப்படம் ரிலீசான நிலையில் மலையாளத்தில் மஞ்சு வாரியர், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் ஜாக் அண்ட் ஜில் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சௌபின் ஷாகிர் என்பவர் நடித்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழிலும் இந்தப் படம் சென்டி மீட்டர் என்ற டைட்டிலில் வெளியாக உள்ளதாகவும், சௌபின் ஷாகிர் கேரக்டரில் யோகி பாபு நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: வெட்டுக்கிளி ஒழிப்பு பற்றி தன்னை வைத்து மீம்ஸ் உருவாக்கியவர்களை பாராட்டிய விவேக்
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading