Home /News /entertainment /

ராமேஸ்வரத்தில் அருண் விஜய் 33 படப்பிடிப்பில் இணைந்து கொண்ட யோகி பாபு!

ராமேஸ்வரத்தில் அருண் விஜய் 33 படப்பிடிப்பில் இணைந்து கொண்ட யோகி பாபு!

அருண் விஜய் 33 படப்பிடிப்பில் இணைந்து கொண்ட யோகி பாபு

அருண் விஜய் 33 படப்பிடிப்பில் இணைந்து கொண்ட யோகி பாபு

அருண் விஜய்யின் 33 வது படத்தின் படப்பிடிப்பு  தற்போது ராமேஸ்வரம் பகுதியில் நடக்கிறது.  அதில் யோகி பாபு கலந்து கொண்டுள்ளார். ஹரி படத்தை இயக்குகிறார். 

  • News18
  • Last Updated :
யோகி பாபு படத்தில் இல்லையென்றால் சென்சார் சான்றிதழ் கிடையாது என்று சட்டம் ஏதும் கொண்டு வந்தார்களா தெரியவில்லை. அவர் இல்லாமல் யாரும் படமே எடுப்பதில்லை யாரும். மாரி செல்வராஜில் இருந்து மணிகண்டன், ஹரி வரைக்கும் அனைவர் படங்களிலும் யோகி பாபு நடிக்கிறார். பீஸ்ட், வலிமையிலும் அவர் உண்டு. 

அருண் விஜய்யின் 33 வது படத்தின் படப்பிடிப்பு  தற்போது ராமேஸ்வரம் பகுதியில் நடக்கிறதுஅதில் யோகி பாபு கலந்து கொண்டுள்ளார். ஹரி படத்தை இயக்குகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹரி பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். சிம்பு, பரத் என இளம் நடிகர்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இதுவரை தனது மனைவியின் அண்ணன் நடிகர் அருண் விஜய்யுடன் மட்டும் பணிபுரிந்ததில்லை. ஹரியின் கமர்ஷியல் வேல்யூவுக்கு அப்போது அருண் விஜய் செட்டாகாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.

Also read... மீண்டும் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா - நாயகி யார் தெரியுமா?

ஆனால், இப்போது அருண் விஜய்க்கென்றே ஒரு மார்க்கெட்டும், ரசிகர்வட்டமும் உள்ளது. கையில் நடிகரை வைத்துவிட்டு கால்ஷீட்டுக்கு பறப்பானேன் என்று கடந்த மார்ச்சில் அருண் விஜய்யை வைத்து புதுப்படத்தை ஆரம்பித்தார் ஹரி. உடனே லாக்டவுன்

ஊரடங்கை தளர்த்தியதும் பலரும் கேமராவுடன் ஸ்டுடியோக்களில் செட்டிலாக, ஹரி அவுட்டோர் ஷுட்டிங்குக்காக ராமேஸ்வம் சென்றார். அங்கும் அதைச் சுற்றியுள்ள தூத்துக்குடி பகுதியிலும்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளனவாம். தற்போது இந்தப் படப்பிடிப்பில் யோகி பாபுவும் கலந்து கொண்டுள்ளார்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Arun Vijay, Actor Yogibabu

அடுத்த செய்தி