Yogi Babu: விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் நடிப்பதை உறுதிப்படுத்திய யோகி பாபு!

அஜித் - யோகி பாபு

அஜித்துடன் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார் யோகிபாபு.

  • Share this:
    விஜய்யின் 65-வது படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த யோகிபாபு, அஜித் படத்தில் நடிப்பதையும் தற்போது உறுதி செய்துள்ளார்.

    ஹீரோவாக நடித்துக் கொண்டே குணச்சித்திரம், நகைச்சுவை என பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகர் யோகி பாபு. படத்தில் கதையே இல்லா விட்டாலும் யோகி பாபு இருக்க வேண்டும் என்பதில் பல தயாரிப்பாளர்கள் வெறியாக உள்ளனர். விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படத்தில் யோகிபாபு நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆமாம், விஜய் படத்தில் நடிக்கிறேன் என யோகிபாபுவே அதனை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய்யுடன் அவர் நடிக்கும் நான்காவது படம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அஜித்துடன் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார் யோகிபாபு. வலிமையை ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். ஆக்ஷன் என்டர்டெயினராக தயாராகும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால், தீபாவளிக்கு படம் திரைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    வலிமையில் ஹுமா குரோஷி நாயகியாக நடிக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் படப்பிடிப்பை தொடங்க வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: