Yogi Babu: விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு!

விஜய் - யோகிபாபு

மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் யோகி பாபு நடிக்கும் நான்காவது படம் இது.

  • Share this:
    விஜய்யின் 65-வது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் யோகி பாபு.

    வடிவேலு, சந்தானம் இல்லாத இடத்தை யோகி பாபுவை வைத்து நிரப்புகிறது தமிழ் சினிமா. கூர்க்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த அவர், கர்ணன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அதோடு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்திலும் குணச்சித்திர வேடத்தில் தான் நடிக்கிறார். அத்துடன் காமெடி வேடங்களில் நடிக்கும் 1 டஜனுக்கும் அதிகமான படங்கள் கை வசம் உள்ளன. ஒரு நாளைக்கு 24 மணிநேரம் யோகி பாபுக்கு போதவில்லை என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். தற்போது ஊரடங்கால் ஓய்வில் இருக்கும் யோகி பாபு, விஜய்யின் 65-வது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

    விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பூஜா ஹெக்டே நாயகி. ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது. முதல் ஷெட்யூல்டை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பியவர்கள், இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு, பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கை தீர்மானித்தனர். எனினும், கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உருவானதால், படப்பிடிப்பு தடைபட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்து தயாராகிற இந்தப் படத்தில் யோகி பாபு நடிப்பதாகக் கூறப்பட்டது. சமூகவலைதளத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் இதனை உறுதி செய்தார் யோகி பாபு. மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் யோகி பாபு நடிக்கும் நான்காவது படம் இது.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. வரும் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த வெளியாவதால், விஜய் படத்தை 2022 ஜனவரி பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: