வீட்டில் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு - வீடியோ

யோகி பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீட்டில் ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு - வீடியோ
நடிகர் யோகி பாபு
  • Share this:
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டிய யோகிபாபு, தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக இருக்கிறார். ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவையில் அசத்தி வரும் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் காக்டெய்ல் என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு சில மாதங்களுக்கு முன்னர் பார்கவி என்ற பெண்ணை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் தனது திருமண வரவேற்பு விழாவை நடத்த யோகி பாபு முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் முடியாமல் போனது.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை வீட்டில் சிம்பிளாக கொண்டாடியுள்ளார் யோகி பாபு. அதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: ஜானி பட ரீமேக்கில் நடிக்க விரும்பினார் அஜித் - ஜான் மகேந்திரன்

அதில் தன் முகத்தில் கேக் பூசும் நபரின் மீது பதிலுக்கு முகம் முழுக்க கேக் பூசிவிடுகிறார் யோகிபாபு. இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் யோகி பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading