• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு

Yogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு

நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகிபாபு நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.

  • Share this:
    படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகிபாபு நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.

    தனி ஒருவன் உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. தற்போது ‘நாயே பேயே’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனை சக்திவாசன் இயக்கியுள்ளார். இதில் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’நாயே பேயே’ படத்தில் ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இந்நிலையில் பிஸியான காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வரும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடன் கொண்டுள்ள நட்பிற்காக, நாயே பேயே படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இது குறித்து பேசிய தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணா, “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார். ஆனால் படத்தில் தனது பங்களிப்பு இருக்க வேண்டுமென அவர் கொடுத்த ஐடியா தான் இந்த ப்ரோமோ வீடியோ” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: