முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிறுவேடம்.. ஃபைட் மேன்.. சினிமாவை விடாமல் துரத்தி வெற்றியை ருசித்த யோகிபாபு..!

சிறுவேடம்.. ஃபைட் மேன்.. சினிமாவை விடாமல் துரத்தி வெற்றியை ருசித்த யோகிபாபு..!

யோகி பாபு

யோகி பாபு

யோகி பாபுவின் 200வது படமான மெடிக்கல் மிராக்கல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் 200 படங்களை தாண்டும் நடிகர் பட்டியலில் யோகி பாபு இணைந்துள்ளார்.  அவர் நடிக்கும் 200 வது திரைப்படத்திற்கு மெடிக்கல் மிராக்கல் என தலைப்பு வைத்துள்ளனர்.

அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி என்ற திரைப்படத்தில் யோகி பாபு அறிமுகமானார். அதில் நடித்த காரணமாகவே பாபு என்ற அவரின் பெயருக்கு முன்னால் யோகி என்ற பெயர் சேர்ந்து யோகி பாபு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதேபோல் பட்டத்துயானை உள்ளிட்ட சில படங்களில் ஃபைட் மேனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்களில் கவனிக்கத்தக்க வகையில் நகைச்சுவை செய்ததால் தனி நகைச்சுவை நடிகராகவே உயர்ந்தார்.

யோகி பாபுவின் 200வது படமான மெடிக்கல் மிராக்கல் பட ஃபர்ஸ்ட் லுக்

வடிவேலு, விவேக், சந்தானம், சூரி ஆகியோருக்கு பிறகு தனி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் என்ற பெயரையும் யோகி பாபு பெற்றார். இதன் பின்பு கதை நாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அதை சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய ஜான்சன் இயக்குகிறார்.   மெடிக்கல் மிராக்கல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. அந்த படத்தின் முதல் பார்வையை தற்போது வெளியிட்டுள்ளனர்.

மெடிக்கல் மிராக்கல் யோகி பாபு நடிக்கும் 200-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 200 படங்களை தாண்டி நடிகர்கள் பட்டியலில் யோகி பாபு இணைந்துள்ளார்.

First published:

Tags: Actor Yogibabu