Home /News /entertainment /

குடும்ப வன்முறை... பல பெண்களுடன் தொடர்பு... பிரபல பாடகர் மீது மனைவி புகார்

குடும்ப வன்முறை... பல பெண்களுடன் தொடர்பு... பிரபல பாடகர் மீது மனைவி புகார்

மனைவி ஷாலினியுடன் ஹானி சிங்

மனைவி ஷாலினியுடன் ஹானி சிங்

ஹானி சிங் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குறிப்பாக ஒரு பஞ்சாபி நடிகை உட்பட பல பெண்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்ததாகவும் ஷாலினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    குடும்ப வன்முறை, பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு என பிரபல பாலிவுட் ராப் பாடகர் யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

    பிரபல பாலிவுட் ராப் சிங்கர் பாடகர் யோ யோ ஹானி சிங். பஞ்சாபியை தாய் மொழியாகக் கொண்ட இவர், இந்தி மற்றும் பஞ்சாபியில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். அதோடு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது அவரது மனைவி, ஷாலினி தல்வார் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்' கீழ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில், தனது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011-ல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக நடத்தியதாகவும், பிற பெண்களுடன் சட்டவிரோதமான உறவுகளை வைத்திருப்பதாகவும் ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனையடுத்து பாடகர் யோ யோ ஹானி சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இந்த குற்றச்சாட்டு தொடர்பான அவரது பதிலை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு, ஹானி சிங் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குறிப்பாக ஒரு பஞ்சாபி நடிகை உட்பட பல பெண்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்ததாகவும் ஷாலினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு தனது கணவர் ஹானி சிங்கிடம் ரூ.20 கோடி இழப்பீடு கோரியும், டெல்லியில் ஒரு முழுமையான வசதியுள்ள வீட்டிற்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் செலுத்துமாறும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார் ஷாலினி. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து யோ யோ ஹானி சிங் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி