Home /News /entertainment /

YearEnder 2021 : குஷ்பு முதல் ஸ்மிருதி இரானி வரை 2021ல் உடல் எடையை குறைத்த அரசியல் பிரபலங்கள்!

YearEnder 2021 : குஷ்பு முதல் ஸ்மிருதி இரானி வரை 2021ல் உடல் எடையை குறைத்த அரசியல் பிரபலங்கள்!

அரசியல் பிர்பலங்கள்

அரசியல் பிர்பலங்கள்

YearEnder 2021: எந்தெந்த பிரபலங்கள் எப்படிப்பட்ட உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

  2021 ஆம் ஆண்டு நாம் நினைத்ததை விடவும் பல சோகங்களையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. கொரோனா பெருத்தொற்று ஒரு புறம் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்க, வீட்டிலே அதிக நேரம் இருப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புகள் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டது. கடந்த இரு வருடங்களாக வீட்டிலே முடங்கி இருப்பதனால் உடல் பருமன் பலருக்கும் கூடிவிட்டது. இதை எப்படி குறைப்பது என்று பலர் யோசித்து கொண்டிருந்த வேளையில் சில பிரபலங்கள் சிறப்பான முறையில் உடல் எடையை குறைத்து காட்டி ஆச்சரிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், எந்தெந்த பிரபலங்கள் எப்படிப்பட்ட உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

  சமீரா ரெட்டி  ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் உடல் எடை குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டு வருகிறார். குழந்தை பிறந்த பிறகு சமீராவின் உடல் எடை எல்லா பெண்களையும் போலவே கூட தொடங்கியது. 42 வயதான சமீரா ரெட்டி தொடர்ச்சியாக பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். குறிப்பாக இவர் பேட்மின்டன், பாக்சிங், யோகா போன்றவற்றை செய்து வருகிறார். மேலும் இன்டெர்மிட்டேன்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting) முறையை பின்பற்றி வருகிறார். இந்த ஆண்டு சுமார் 11 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். தற்போது 81 கிலோவாக உள்ள சமீரா, அடுத்ததாக 75 கிலோ வரை குறைக்க உள்ளார். பலரின் கேலி பேச்சுகளை உடைத்தெறிந்து சிறப்பான முறையில் சமீரா உடல் எடையை குறைத்துள்ளார்.

  இதையும் படிங்க.. விஷ்ணு விஷால் முதல் கயல் ஆனந்தி வரை.. 2021ல் திருமணம் செய்த கோலிவுட் பிரபலங்கள்

  குஷ்பு சுந்தர்

  தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம்வந்த நடிகை குஷ்பு அவர்கள் சமீப காலமாக உடல் எடை குறைப்பு பற்றிய பல விஷயங்களை பேசி வருகிறார். இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத விதமாக 20 கிலோ வரை எடையை குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 51 வயதாகும் குஷ்பு அவர்கள் சரியான உணவுமுறைகளின் படி எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "உடல்நலம் என்பது மிக முக்கியமானது. நான் மாறியதற்கு என்ன காரணம் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். லாக்டவுன் மீது தான் நம்மில் பலர் குற்றம் சாட்டுகிறோம்.. 70 நாட்களாக எந்த உதவியும் எனக்கு இல்லை... வீட்டில் எல்லா வேலைகளையும் தனியாளாக செய்து கொண்டிருந்தேன்; துடைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், சலவை, வீட்டு தோட்டம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை நானே செய்து வருகிறோம். முக்கியமாக உடற்பயிற்சிகள் (யோகா+ பிளாங்க்) ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் நான் அதிக அளவில் சாப்பிடுபவள் அல்ல" என்று குஷ்பு பதிவிட்டிருந்தார்.   

  இதையும் படிங்க.. 2022 பெற்றோர்களின் இலக்கு இதுதான் : இந்த 6 விஷயங்களை மறக்காம செஞ்சுடுங்க

  லிசெல் ரெமோ டிசோசா

  கடந்த 2 வருடங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் லிசெல் ரெமோ டிசோசா. இவர் பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து வருகிறார். இதற்காக இன்டெர்மிட்டேன்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்றி வந்துள்ளார். இவரின் இந்த எடை குறைப்பு பயணத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இதனாலே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தொடர்ச்சியான டயட் முறைகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் சிறப்பான முறையில் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

  ஸ்மிருதி இரானி  இந்த ஆண்டு உடல் எடையை குறைத்து மிகவும் வைரலானவர்களில் ஒருவர் நடிகரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி அவர்கள். இப்போது ஒரு எழுத்தாளராகவும் இருக்கும் ஸ்மிருதி, அடிக்கடி தனது அன்றாட வாழ்க்கையின் காட்சிகளைப் பகிர்ந்து வருகிறார். அதில் தனது உடல் எடையை சிறப்பான முறையில் எப்படி குறைத்து வருகிறார், எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்கிறார் ஆகியவற்றை பற்றி வீடியோவாக பகிர்ந்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Celebrities, YearEnder 2021

  அடுத்த செய்தி